மதுரை : சோழவந்தான் அருகே சி புதூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ்நிர்மல்குமார், டாக்டர்கள் மோனிஷா, சந்திரஜோதி, கிஷா மகேஷ், கணேசன், விவேக், திவ்ய மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் 900க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்கினர். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது. மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், மணிகண்டன், சதீஷ்குமார், புவனேஸ்வரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி