திருவள்ளூர்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி, பதில் நேரத்தில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பொன்னேரி அருகே மாதவரம் ஊராட்சியில் 100கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றி அமைத்து சீரான மின் விநியோகம் செய்திட நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொன்னேரி தொகுதியில் 11 மின்மாற்றிகள் நிறுவ திட்டமிடப்பட்டு, ஏற்கனவே 3மின்மாற்றிகள் நிறுவப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு, 8மின்மாற்றிகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் முஸ்லீம் நகரில் ஏற்கனவே 100 கே.வி மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில் கூடுதலாக தேவையெனில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து மீஞ்சூர் பேரூராட்சியில் 18000குடும்பங்கள் வசிக்கும் நிலையில் மின் பற்றாக்குறையும், மின்தடையும் ஏற்பட்டு வருகிறது எனவும், கலைஞர் ஆட்சியில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து மாநிலம் முழுவதும் மின் விநியோகம் செய்யும் நிலையில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீஞ்சூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், உதவி செயற்பொறியாளர் உட்பட அதிகாரிகள் காலி பணியிடங்கள் உள்ளது என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதி துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. எனவும், குறிப்பிட்ட இடங்களை நிரப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உறுப்பினரின் தேவையான கோரிக்கைகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
முன்னதாக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கோரிக்கை முன்வைத்த போது அவர் பேசுவது கேட்காததால் மைக்கை அருகில் வைத்து பேசுமாறு சபாநாயகர் தெரிவித்தார். அப்போது பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் மைக்கை மேசையில் ஆன் செய்தும் அதில் தட்டி பார்த்தும் பிறகு தமது தொகுதி கோரிக்கைகள் தொடர்பாக பேச தொடங்கினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு