விருதுநகர்: திருச்சுழியில் சர்வதே சமனித உரிமைகள் தின பிரச்சாரம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழிஸ்பீச் . நிறுவனம் சார்பில், சர்வதேச மனித உரிமைகள் தினம் நடை பெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற கையெழுத்துப் பிரச்சாரத்தை, திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி,தொடங்கி வைத்தார்.ஸ்பீச் நிறுவன , திட்ட இயக்குனர் பொன்ன முதன், நிதி இயக்குனர் செல்வம், திருச்சுழி வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினர் மொகைதீன் ஸ்பீச், மக்கள் தொடர்பாளர் பிச்சை , திட்ட மேலாளர்கள் சுரேந்தர்,
காளிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மனித உரிமை காப்போம் என, உறுதியேற்று கையொப்
பமிட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி