சிவகங்கை: கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ்,கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும்ரூ.50,000/- மானியத்துடன் ரூ.03.00 இலட்சம் வரை கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார். சமூக நீதி அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தும் நோக்கிலும், தமிழக அரசு ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 இலட்சம் வரை கடனுதவி வழங்கும் கலைஞர் கைவினை திட்டத்தினை அறிமுகப்படுத்தி அரசு ஆணை எண். 64, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நாள் (06.12.2024)-ல் வெளியிட்டுள்ளது.
கலைஞர் கைவினை திட்டமானது, குடும்பத் தொழில் அடிப்படையில் இல்லாமல், 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளது. மேலும், கலைஞர் கைவினைத்திட்டத்தில் அதிக பட்சமாக ரூ. 50,000/- வரை 25% மானியத்துடன், ரூ.3,00,000/- வரை வங்கி கடன் உதவியும், 5% வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில், விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி