மதுரை: (2003-2005) ம் ஆண்டு 12 ம் வகுப்பு படித்து முடித்த முன்னாள் மாணவ மாணவிகள் சார்பில் ஆசிரியர்களை சந்தித்து யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிகழ்ச்சி நிரல் நடத்த (டிச.29) முடிவு செய்துள்ளனர். இதில், ‘எங்கள் பள்ளி மிளிரும் அரசுப் பள்ளி’ எனும் தலைப்பில், அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணக்குமார், ஆசிரியர்கள் கணக்குப்பதவியல் மற்றும் வணிகவியல் சின்ன கருப்பன், இஸ்மாயில், ஊட்டச்சத்து ஆசிரியர் பேபி ராணி, தமிழ் திருஞான சம்மந்தம் மற்றும் கஸ்தூரி, தாவரவியல் ராஜ சுலோக்ஷனா, ஆங்கிலம் சுதாமதி, விலங்கியல் மணிமேகலை மற்றும் பலரிடம் அழைப்பிதழ் வழங்கினர். நிகழ்வில் முன்னாள் மாணவ மாணவிகள் மலர்விழி, உமா சங்கரி, ராஜ்குமார், நாகலிங்கம், பாரதி, மற்றும் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி