காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் விலையில்லா வீடு திட்டத்தின் கீழ் மூதாட்டி ஒருவருக்கு சுமார் 4 லட்சம் மதிப்பிலான வீடு கட்டி அதனை அவரிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரம், சைக்கிள், பூச்சி மருந்து தெளிப்பான் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிர்வாகி மற்றும் தொண்டர்களிடையே பேசுகையில், விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து மக்கள் மன்றமாகவும் அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றி கழகமாக தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறோம். இனி வருங்காலங்களில் கூடுதலாக மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து மக்களிடையே அன்போடு பழக வேண்டும் எனவும், தமிழக வெற்றி கழகம் பொறுத்தவரை அனைவருக்கும் ஒரே தலைவர் என்பதும் அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் பிரபல நடிகருமான விஜய் எனவும், அவரின் கீழ் அனைவரும் தொண்டர்களே எனவும் குறிப்பிட்டார். நிர்வாகிகளிடையே எந்த கருத்து வேறுபாடும் நிலவக்கூடாது எனவும், அப்படி நிலவும் நிலையில் தளபதியின் போட்டோவை பார்த்து சமரசம் கொள்ள வேண்டும் எனவும் நமது இலக்கு 2026 இல் தளபதியின் கனவை நிறைவேற்ற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி