திருவள்ளூர் : சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி இரயில் மார்க்கம் இடையே மீஞ்சூர் இரயில் நிலையம் உள்ளது. மீஞ்சூர் இரயில்வே கேட். பகுதியை நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அனைவரும் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளின் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவமனை வங்கி உள்ளிட்ட அவசியத் தேவைகள் அனைத்திற்கும் இந்த இரயில்வே கேட்டை கடந்த சென்று வந்த நிலையில் உள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் அவசர. கால வழியை இரயில்வே நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன் எவ்வித மாற்று வழியும் செய்யாமல் அடைத்தது. இதனால் காலை மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் பல மணி நேர விரயமும் இதனால் பள்ளி குழந்தைகள் கர்ப்பிணிகள் முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் பொதுமக்கள் பாதிக்கப்படும் மீஞ்சூர் இரயில்வே கேட்டு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சென்னை கோட்ட இரயில்வே மேலாளர் விஸ்வநாதன் ஈரியா மற்றும் இரயில்வே துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் உடனடியாக மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகன ஓட்டிகள் பொதுமக்கள் செல்வதற்காக மினி சுரங்கப்பாதை உடனடியாக ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும் இரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சிதம்பரம் வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் ராஜேந்திரன் மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர் .
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு