மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டத்திற்கு உட்ப ட்ட திருவாலவாயநல்லூர், சி.புதூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் அறக்கட்டளை சார்பாக ஆடு வளர்ப்பு முறை பற்றி ஊட்டி ஆடு வளர்க்கும் ஆராய்ச்சி மையத்தில் கண்டுணர் பயிற்சி2 நாட்கள் நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு தலைமை மருத் துவர் பிரேமா தலைமை தாங்கினார். தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஆடு இனவிருத்தி ஆராய்ச் சி நிலையத்தில் ஆடுகளின் வகை கள்,பரன் மேல் ஆடு வளர்ப்பு பரா மரிப்பு முறைகள், தீவனம் வேளா ண்மை, நோய் தடுப்புமுறைகள், இனவிருத்திக்கான ஆலோசனை கள் பற்றி கால்நடை டாக்டர்கள் சதீஸ், சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் விவசாயிகள் நேரடி பயிற்சியளித்தனர். இதன் ஏற்பாடுகளை ஜி.எச்.சி.எல். அறக்கட்டளை நிதி பங்களிப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் செய்திருந்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி