திருச்சி: கடந்த (09.02.2025) ஞாயிற்றுக்கிழமை மலைக்கோட்டை நகரமம் திருச்சி மாநகரில் புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 வது மாநில மாநாடு நடைபெற்றது. இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. ஜே. அருள் டல்லஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள், கோரிக்கை விளக்க உரையினை மாநில தலைவர் திரு .ஜான்சன் அவர்கள் விளக்கினார்கள். சிறப்பு விருந்தினர்களாக சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு. மு. அப்பா அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், சிறுபான்மையர் நல ஆணையத்தின் தலைவர் அருத்திரு. ஜோ. அருண் அவர்கள், தொழிலதிபர் E.N.தம்பிதுரை அவர்கள் கலந்து கொண்டார்கள் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள். இறுதியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சங்கத்தில் கொடுக்கப்பட்ட 18 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். யு 13 வது மாநில மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சார்பாக சுமார் 1500 பேர் கலந்து கொண்டார்கள் மாநில மாநாடு வெற்றி மாநாடாக அமைந்தது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்