மதுரை : மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக 25 ஆம் ஆண்டு கொடி நாள் விழா கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்கராஜ், டாக்டர் பொன் யாழினி ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னாள் பேரூர் செயலாளர்கள் மாரியப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் கட்சி கொடி ஏற்றி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில், முத்துப்பாண் டி, பேரூர் துணைச்
செயலாளர் அரிமலை , வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ் , துணை பொறுப்பாளர் பெருமாள், சோழ வந்தான் பேரூர் மகளிர் அணி சுப்புலட்சுமி, மகேஷ்,மாவட்ட மகளிர் அணி கண்ணம்மாள் , ஒன்றிய மகளிர் அணி நிர்மலா தேவி,ஆனையூர் பழனி, மாவட்ட மாணவர் அணி அருண் மற்றும் வாடிப்பட்டி பேரூர் கழக நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
முடிவில், பேரூர் நிர்வாகி நிதர்ஷன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி