திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 7வது வார்டு பகுதியில் அமைந்துள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேணுகா வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே.சுரேஷ், 7வது வார்டு கவுன்சிலர் ஜோதிலட்சுமி மோகன் , ஷேக் அகமது, ஜோதி முருகன், சங்கர், ஸ்ரீனிவாசன், ஜோதி ஸ்ரீதர், சதக்கத்துல்லா மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியில் கலை நிகழ்ச்சி, நடனம், பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு