மதுரை : மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, ஈஸ்வரா பொது மருத்துவமனை, ராதா பல்மருத்துவ மனைகளுடன்இணைந்து
ஆர்.ஜெ. தமிழ்மணி சமூகப்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் பரவை மேற்கு ஊராட்சி தொடக்க பள்ளியில் நடந்தது. இந்த முகாமிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். ஜெயபாலன்,கணேஷ் குமார், ரம்யா, விஜயகுமார், சௌமியா, உபேந்திரன், பேரூராட்சி தலைவர் கலா மீனா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூர் செயலாளர் பரவை ராஜா வரவேற்றார். இந்த முகாமினை அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜெயந்தி ராஜூ. தொடங்கி வைத்தார். இம்முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஈஸ்வரா மருத்துவமனை மருத்துவ குழவினர் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்டடோருக்கு கண், பல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி