மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டிஅருகே ,நீரேத்தான் வெங்கடாஜலபதி மெட்ரிகுலேஷன் பள்ளி50-வது பொன்விழா ஆண்டு விழா , கிருஷ்ணா மஹாலில் 2 நாட்கள் நடந்தது.இந்த விழாவிற்கு, தலைமை நிர்வாக அலுவலர் கிரிஜா தலைமை தாங்கினார். முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பவித்ரா வரவேற்றார். துணை முதல்வர் திவ்யா ஆண்டறிக்கை வாசித்தார். இந்த விழாவில் , மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராஜகோபால் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி