செங்கல்பட்டு: செங்கல்பட்டு அதிமுக மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர். பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படி, முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் மறைமலைநகர் நகர மன்ற தலைவருமான எம்.ஜி. கே.கோபிகண்ணன் ஏற்பாட்டில், கழக மகளிர் அணி இணை செயலாளர் கணிதா சம்பத், மாவட்ட கழக அவை தலைவர் ஏ.எம்.பொன்னுசாமி, மற்றும் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மேலமையூர் இ.எஸ்.கே.சம்பத்குமார், மறைமலை நகர்
நகர செயலாளர் ரவிக்குமார், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் அபிஷேக ஆராதனை மற்றும் சமபந்தி விருந்தோம்பல் நடைபெற்றது. இதில் நகர இலக்கிய அணி செயலாளர் காந்தி நகர் ஆர்.வேலு (எ) வேலாயுதம், பாளையம், யோகசங்கர், எம்.ஜி.கே.பாரதி, உட்பட அதிமுகவை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்