திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கொடூர் ஊராட்சியில் அடங்கிய அருந்ததியர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு அரசு வழங்கும் நத்தம் புறம்போக்கு பட்டா வழங்கப்பட்டது. 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டு கம்ப்யூட்டர் பட்டவாக ஆகவில்லை எனக் கூறி பலமுறை அரசுத்துறை அதிகாரியிடம் மனு அளித்தும் பயனில்லாததால் தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மனு கொடுக்க விரும்பி அருந்ததியர் காலனி மக்கள் பொன்னேரி தாலுகா அலுவலகம் வந்தனர்.
அங்கு வந்து அரசு துறை அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டு இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் ஆர்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு