சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம். (21.06.2023) கண்காணிப்பு குழு தலைவர் / பாராளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்திக் ப சிதம்பரம் அவர்கள் தலைமையில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆஷா அஜித்.இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காரைக்குடி சட்டமன்ற நடைபெற்றது, உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டத்தில், தேசிய சமூக உதவித்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக குடிநீர் வழங்கள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகன் மேம்பாட்டுத்திட்டம், தூய்மை பாரத இயக்கம். பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி பால் பீ யோஜனா, சமக்ர சிக்ஷம் ஆகியத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் (தனி நபர் இல்ல கழிப்பறை), தூய்மை இந்தியா திட்டம் (சமுதாய கழிவறைகள்), திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா திட்டம், பாரம்பரிய விவசாய யேம்பாட்டுத்திட்டம், மின் கட்டணமப்பு சார்த்த தனித்து இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்தல். ஜல்ஜீவன் மிஷன். தேசிய சுகாதாரம் இயக்கம், தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், தொழில் வணிகத்துறையின் சார்பில் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஒன்றிய, மாநில அரசின் துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரான சிவகங்கை பாராளுமன்றர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
உறுப்பினர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள். தேவையான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக ஆண்டறிக்கையின்படி, விரிவாக எடுத்துரைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத்தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான சினகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்திக் ப சிதம்பரம் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், செயற்பொறியாளர் திருமதி வெண்ணிலா. அனைத்து ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலு பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடன் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியாதைக்குரிய ஆர் சண்முகசுந்தரம் அவர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மரியாதைக்குரிய ராஜ செல்வம் அவர்கள் செய்தித்துறை சார்ந்த மரியாதைக்குரிய மகேந்திரன்,மஞ்சுநாத், சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி