சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை 16வது வார்டு நகர் மன்ற நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில்
துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி ஆகியோர் மாணவர்களுக்கு உணவு வழங்கி மாணவருடன் அமர்ந்து சாப்பிட்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.உடன் நகர்மன்ற உறுப்பினர்கள் நிரோஷா சுந்தரலிங்கம், ஐயப்பன், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி