திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை கூக்கால் ஊராட்சி புது புத்தூர் கிராமத்தில் தமிழக முதல்வர் அறிவித்த உள்ள கிராம சபை கூட்டம் இன்று நடைபெறும். என அறிவித்திருந்த நிலையில் அக்.2 முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புறக்கணிப்பு தலைவர் துணைத் தலைவர் ஊராட்சி செயலர் உள்ளிட்டவர்கள் கடந்த நான்கு வருடங்களாக மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்துள்ளனர். தலைவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ஊராட்சியில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் அனுப்பி உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா