திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மற்றும் பொங்கல் விழா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி தலைமை வகித்தார், துணை பெருந்தலைவர் தமிழ்ச்செல்வி பூமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார் (கிராமஊராட்சி) நடராஜன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் பி.டி.பானுபிரசாத், சுமித்ராகுமார், நெய்த வாயல்ராஜா, கொண்டகரை ஆர்.எல். ரமேஷ், நந்தியம்பாக்கம் கதிரவன், உள்ளிட்ட 20 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் தேவைப்படும் குடிநீர், மின் விளக்கு, சாலை வசதி, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை குறித்து கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றினர். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு