திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் பட்டா, முதியோர் உதவி தொகை, கடன் உதவி, மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்க்கும் வகையில் வருவாய் மருத்துவம் காவல் உள்ளிட்ட அரசு துறைகளைச் சார்ந்த அதிகாரியிடம் பொதுமக்கள் 277 கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வ சேகரன், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், பார்த்தசாரதி, பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் ,விச்சூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சகிலா சகாதேவன் , வருவாய் ஆய்வாளர் அன்புச்செல்வன், நிள அலுவலர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் தேவன், ஹரிகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் கதிரவன் ,சாந்தகுமார், வேலாயுதம், இந்திரன் ,சீனிவாசன் ,தட்சிணாமூர்த்தி, ராகவேல், ஊராட்சி செயலாளர்கள் முனுசாமி, கிருபாகரன், ஏழுமலை, மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு