சிவகங்கை: மனிதநேய மக்கள் கட்சி திருப்பத்தூர் நகர் கிளையின் சார்பில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்து திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள 8 பள்ளிவாசல்களிலும் ஜும்மா தொழுகைக்கு பிறகு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கமரல் ஜமான் திருப்பத்தூர் நகர் தலைவர் ER சமஸ்கான் நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தமுமுக நகர் செயலாளர் அசாருதீன் ஊடகப்பிரிவு மாவட்ட பொருளாளர் அமானுல்லா MTS மாவட்ட செயலாளர் வருசை முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் சீனிவாசன் மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கணேசன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி