(அரசு பதிவுபெற்றது 22/1/04-TC, TN TAM 15850 -Dat-19.08.2004) எனும் ஒரு அறிவியல் சிற்றிதழ் அனைவரும் விரும்பும் வண்ணம் அஞ்சல் அட்டையிலேயே சிற்றிதழ் 33 ஆண்டுகளாக நடத்தி வருவது தாங்கள் அரிந்ததே இந்த அஞ்சல் அட்டை இதழில் அறிவியல் செய்திகள், கேள்வி பதில், வாசகர் கடிதம், போட்டி, கவிதை, நகைச்சுவை, துளிக்கதை, மூளைச்செய்திகள், பழமொழி, விளம்பரம், பலமொழி, ஓவியங்கள் என பெரிய இதழ்களில் உள்ள அனைத்து அம்சங்களையும் உள்ளாக்கிய மாத இதழாக வெளியிட்டு சிறந்த பாராட்டைப் நாடெங்கும் பெற்றுள்ளது. அனு இதழை அனைத்து பெரிய,சிறிய பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சிகள் அனைத்துமே பாராட்டியுள்ளன.
இதற்காக லிம்கா சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றதோடு அசிட் சாதனை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுத்தந்தது சிங்கப்பூர் பொக்கியோ தமிழ்ச்சங்கமும்,தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து கவிமலை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைத்து பாராட்டும் பெற்றது. வாசகர்களின் பேராதரவு மாறாமல் அன்று முதல் இன்றுவரை அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கிறது . (12.4.2024) அன்று அனு சிற்றிதழ் பருந்து பார்வை வெளியிட்டாரும், ஆசிரியரும், நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் இதழ் வெளியிட்டார். இவ்விழாவில் அனு சிற்றிதழ் ஆசிரியர் ஓவியர் தமிழறிஞர்.நா.முத்துக்கிருட்ணன் அவர்கள் இதழ் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் பா.இளங்கோ, துணை கண்காணிப்பாளர் ஓய்வு ஞானசேகரன், புத்தகக்கடை முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராம்தாஸ், ஆறு.சரவணன், சேது, இலக்கிய அணி ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி