சிவகங்கை : சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள். காவல் துறையினர் மைக்ரோ அப்சர்வர் மற்றும் இதர அலுவலர்களில் பிற பாராளுமன்றத் தொகுதியில் ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு சம்மந்தப்பட்ட பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வாக்குகள் பெறப்பட்டு (12-04-2024) முதல் (15-04-2024) வரை இதற்கென அமைக் 2/2 சிறப்பு அஞ்சல் வாக்கிற்கென வாக்குச்சாவடி மையங்களில் (Facilitation Center) அஞ்சல் வாக்குகள் செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
மேலும். இப்பணி (16-04-2024) அன்று வரை நீட்டிக்கப்பட்டு அதன்படி 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியிலும், 182-ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 184காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 185-திருப்பத்தூர் அலுவலர்களுக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிபுரியும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 186-சிவகங்கை தொகுதியில் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்திலும் 187 மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு மானாமதுரை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் அஞ்சல் வாக்கு சிறப்பு மையங்கள் தொடர்ந்து செயல்பட உள்ளது.
எனவே, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இந்த வாய்ப்பினைப்
பயன்படுத்தி அஞ்சல் வாக்குகளை செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.