சிவகங்கை : பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம்-மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆய, அவர்கள் தகவல். 22 சென்னை முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அவர்களின் செய்திகுறிப்பின் படி, 2024ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் இரண்டாம் கட்டமாக அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் (26.04.2024 முதல் கட்டம் மற்றும் (07.05.2024) இரண்டாம் கட்டம்) மற்றும் கேரளாவில் (26.04.2024) ஆகிய தினங்களில் மக்களவை தேர்தல்கள் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், 1951ஆம் வருட மக்கள் பிரதிநித்துவச் சட்டம் மற்றும் பிரிவு 135B-ன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்டநிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றம் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அவர்கள் தம் சொந்த மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பினை சம்மந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் வழங்கிட வேண்டும்.
அந்த வகையில், தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வழங்காத நிறுவனங்கள் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒட்டுரிமை உள்ள தொழிலாளர்கள் புகார் அளிக்க ஏதுவாக சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) தலைமையில் ஆட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டிரோடு, காஞ்சிரங்காலில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (அமலாக்கம்) அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய
விடுமுறை அளிப்பது தொடர்பான புகார்களை, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்
(அமலாக்கம்) அலுவலகம் 04575-240521 மற்றும் 9894160047 என்ற தொடர்பு எண்களிலும். சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளரை 96553 46209 என்ற அலைபேசி
எண்ணிலும், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளரை 79040 03322 என்ற
அலைபேசி எண்ணிலும், தேவகோட்டை ஆய்வாளரை 99946 07014 அலைபேசி
தொழிலாளர் உதவி எண்ணிலும், காரைக்குடி தொழிலாளர் உதவி ஆய்வாளரை 98425 84526 என்ற அலைபேசி எண்ணிலும். சிவகங்கை முத்திரை ஆய்வாளரை 94864 37673 என்ற அலைபேசி எண்ணிலும். காரைக்குடி முத்திரை ஆய்வாளரை 99447 31719 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்டஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி