சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் ரூபாய் 3 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை அமைத்து மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சங்க தலைவர் கதிரேசன், நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ்,டிஎஸ்பி பார்த்திபன், ஆய்வாளர் கணேச மூர்த்தி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி