திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, ஆயுதப்படை மைதானத்தில், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பான, கள ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நேரடியாக பங்கேற்று, ஒவ்வொரு வாகனத்த்யும், துல்லியமாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வாகனங்களின் அவசரகால வழிகளின் செயல்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள், இருக்கை வசதிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள், வாகனங்களின் இயக்க செயல்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து, மிகத்தெளிவாக ஆய்வு செய்யப்பட்டன. அத்துடன், வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்து நர்களின் பார்வைத்திறன் குறித்து, கண் மருத்துவ நிபுணர்களால், அதிநவீன உயர்தொழில்நுட்ப கண் கருவிகளைக் கொண்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. போக்குவளத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை, மிகக்கவனமாக இயக்கும்படி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
தீயணைப்பு கருவிகளை முறையாக கையாளுவத்கு, தீயணைப்புத்துறை அலுவலர்களாலும், 108 ஆம்புலன்ஸின் செயல்பாடுகள் குறித்து, மருத்துவத்துறை அலுவலர்களாலும், விளக்கம் அளிக்கப்பட்டன. இந்த ஆய்வில், திருநெல்வேலி பகுதியில் இருந்து 222, வள்ளியூர் பகுதியில் இருந்து 275 மற்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து 109 என, பள்ளி வாகனங்கள் மொத்தம் 606 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வின் போது, திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், துணைப்போக்கு கண்காணிப்பாளர் காமேசுவரன், ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன், நிலைய தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் திருநெல்வேலி பிரபாகன், வள்ளியூர் பெருமாள், அம்பாசமுத்திரம் ராஜசேகர் உட்பட பலரும் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி