திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு வட காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. கொடியேற்று விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கொடி மரத்திற்கு பால் தயிர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடி மரத்தில் கொடியானது ஏற்றி வைக்கப்பட்டது. பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக வருகிற
22 ஆம் தேதி கருடசேவை நிகழ்ச்சியும் 25 ஆம் தேதி பெருமாள்ஸ்ரீதாயார் திருக்கல்யாண வைபவமும் 26 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு