செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் செல்வி மலர் ராமலிங்கம் நினைவு பூப்பந்தாட்ட போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 53 அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகின்றனர். தேர்வு செய்யப்பட்ட நான்கு அணிகள் விளையாட உள்ளனர். அவர்களுக்கு பரிசு தொகையாக ரூபாய் 57000 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை சந்துரு பூப்பந்தாட்ட கழகம் சிறப்பாக செய்திருந்தது. போட்டியினை வி. எழிலரசன் பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகம், வேலாயுதம், இயக்குனர், வெற்றி ரியல்ஸ், டாக்டர் . சீனிவாசன், துணைத் தலைவர், TNBBA ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்கள் சார்லஸ் ராஜ்குமார் செயலர், செங்கல்பட்டு மாவட்ட பூப்பந்தாட்ட கழகம், பொருளாளர் பாலசுப்ரமணியன், செந்தில்ராஜ் டைரக்டர்,s-, ஜென் எனர்ஜி, . CR ராஜா, மா. தலைவர், இந்து முன்னணி, உடற்கல்வி இயக்குனர்கள் ஆசாத் அலி கான் எஸ் .ஆர். எம் பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார், நந்தா, (நட்சத்திர விளையாட்டு வீரர் ) D. ஆனந்த், ஐசிஎப் 0பயிற்சியாளர், ஜெயகன், ICF பயிற்சியாளர், தென்னக ரயில்வே பயிற்சியாளர்கள் கே .எஸ் சுரேஷ், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்களுக்கு உணவும், இருப்பிடமும் இலவசமாக செய்யப்பட்டிருந்தது. போட்டி ஏற்படுகளை சந்துரு பூப்பந்தாட்ட கழக தலைவர் . சந்திரசேகர், ஆசிரியர் மிகச் சிறப்பாக செய்திருந்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்