மதுரை: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், முதலைக்
குளம் ஊராட்சியில், செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதலைக்குளம் ஊராட்சி மன்றம் இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில், ஆண்கள் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம்,
கண் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கான, மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டது. இதில், ரத்தப் பரிசோதனை, நீர் பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இசிஜி பரிசோதனை, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனை செய்யப்பட்டு, இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இருந்து மருத்துவ பணியாளர்களும் முதலைக்குளம் ஊராட்சி சார்பில் பணியாளர்களும் ,முகாமில் கலந்து கொண்டனர். இதில், முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில், ஊராட்சி
மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் எஸ். அரவிந்த், துணைத் தலைவர் ரேவதி பெரிய கருப்பன் ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு, சிறப்பு செய்தனர். ஊராட்சி செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி