திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், திண்டுக்கல் இணைந்து நடத்தும் சிறப்பு புத்தக் கண்காட்சியை தலைவர்.முத்துசாரதா, முதன்மை மாவட்ட நீதிபதி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இப்புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, இறையன்பு அவரது”என்ன பேசுவது எப்படி பேசுவது”, டாக்டர்.அம்பேத்கர், டாக்டர்.A.P.J.அப்துல்கலாம், வரலாற்று அறிஞர்களின் தத்துவங்கள் & கொள்கைகள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள் மற்றும் சட்ட புத்தகங்களின் சிறப்பம்சங்களை பற்றி எடுத்துரைத்தார்.
இப்புத்தக இக்கண்காட்சியில் 10% சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மெகபூப் அலிகான், கூடுதல் மாவட்ட நீதிபதி, விஜயகுமார், குடும்ப நல நீதிபதி, முரளிதரன், SC/ST சிறப்பு நீதிபதி, சரண், மகிளா நீதிபதி, கனகராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், மீனாட்சி, முதன்மை சார்பு நீதிபதி, தீபா. கூடுதல் சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் (பொறுப்பு), மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு.சோமசுந்தரம், கூடுதல் சார்பு நீதிபதி. அருண்குமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி. பிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்1,.ஆனந்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3, சௌமியா மேத்யு, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர், வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் செயலாளர், இதர வழக்கறிஞர்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பாக. கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை விற்பனை சீரமைப்பாளர், மகேந்திரன், மண்டல மேலாளர், அய்யப்பன், கிளை மேலாளர், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா