சிவகங்கை : அரசாணை (நிலை) எண்:22 நாள்: (29.01.2024)-ன் படி மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட அலுவலர்களும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, வருகின்ற (26.06.2024) அன்று திருப்பத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் நடைபெற உள்ளது.
மேலும், அன்றைய தினம் பிற்பகல் 04.30 மணி முதல் 06.00 மணி வரை பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூர் வட்டம் அருள்மிகு திருத்தலிநாதர் கோவில் அருகில் அமைந்துள்ள ஆர்.கே.மஹாலில் நடைபெற உள்ளது. மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில், பொது மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி