திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறையின் 1433-ம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இன்று 11.ம் நாள் நடந்த ஜமா பந்தியில் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த.40 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா , அத்திப்பட்டு ஊராட்சி புதுநகர் மேற்கு பகுதி சேர்ந்த 542 குடும்பத்திற்கு பட்டா வேண்டி அத்திப்பட்டு துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் ஜமா பந்தி அதிகாரியிடம் மனு கொடுத்தார் .மனுவை பரிசோதனை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி அறிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு