மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சி. சந்தன மாரியம்மன் கோவில் எதிரே. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II நிதியிலிருந்து சுமார் 13.16 இலட்சம் செலவில் கட்டப்பட்ட நியாய விலை கடை அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் திரு. லெட்சர் கான் சாகுல் ஹமீது அவர்கள் கூறுகையில் கருப்பட்டி ஊராட்சியில் சுமார் 1050 க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் கருப்பட்டி ஊராட்சியில் உள்ள கருப்பட்டி கிராமம் பொதுமக்களும் கணேசபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களும் சுமார் 500 அட்டைதாரர்கள் கருப்பட்டி ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
தனியாருக்கு சொந்தமான வாடகை இடத்தில் நியாய விலை கடையை நடத்தி வருவதால் போதுமான வசதிகள் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட கூட்டுறவுத் துறையும். தமிழ்நாடு அரசு விரைந்து கருப்பட்டி கிராம மக்கள் நலன் கருதி அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட நிலையில் உள்ள புதியதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று கருப்பட்டி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது