மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பாண்டியராஜபுரம். பள்ளியில் பயின்ற 2023 ..2024 ஆண்டிற்கான பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு.
அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பாண்டியராஜபுரம் முன்னாள் மன்னர்கள் சங்கம் சார்பாக. பரிசுத்தொகையும்.விருதுகளும். அதிக மதிப்பெண் எடுத்த பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தும். பாடங்களில் 100/100 எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளும் விருதுகளும். அந்த மாணவர்களை 100/100 எடுக்க வைத்த அந்தப் பாடத்தின் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும். இவ்விழாவிற்கு அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி. பாண்டியராஜபுரம் பள்ளியின் தலைமை ஆசிரியர். திரு விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் போலீஸ் பிளஸ் நியூஸ் தென் மாநில தலைவருமான திரு. லெட்சர்கான் சாகுல் ஹமீது. அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். திரு ராமராஜன். அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும் போலீஸ் பிளஸ் நியூஸ் தென் மாநில தலைவருமான திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது அவர்கள் கூறுகையில். இனி வரும் காலங்களில் இப்பள்ளிக்கும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலமாக நலத்திட்டங்களை வழி வகுத்து என்ற உதவிகளை செய்து. விளையாட்டுத்துறையில். மாநில அளவில் செல்லும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுத் தொகை இதேபோல வழங்கப்படும் என்றும். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்கம் தரும் விதமாக முன்னாள் மாணவர்கள் சங்கம் செயல்படும் என்று தெரிவித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் திரு கண்ணன் . துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன். துணைத் தலைவர் பரணி ராஜா. பொதுச் செயலாளர் ராமராஜன். துணைப் பொதுச் செயலாளர் லெட்சர் கான் சாகுல் ஹமீது. மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்து தந்தனர். இந்நிகழ்வினை கண்டு பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும். அப்பகுதி பொதுமக்களும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரை வெகுவாக பாராட்டினர் .
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது