செங்கல்பட்டு : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் செங்கல்பட்டு பார் அசோசியேஷன் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய தண்டனை சட்டம் மற்றும் சாட்சிய சட்டத்தின் பெயர்களை முழுவதுமாக இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கொண்டு வந்துள்ள சட்டங்களை அமல்படுத்தியதை உடனடியாக நிறுத்த கோரியும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் கௌரவ செயலாளர் திரு .அய்யாவூர் அவர்கள் தலைமையிலும் வடக்கு மண்டல செயலாளர் திரு .பழனிச்சாமி அவர்களின் முன்னிலையிலும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இவர்களுடன் வடக்கு மண்டலம் செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர்களின் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இவ்வார்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தீஸ்வரர் செயலாளர் குமரேசன் துணை செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் இளங்கோவன் மதியழகன். ஜோஸ்வின் .விஜி .சித்ரா மற்றும் செல்வகுமார் கலந்து கொண்டனர். மேலும்200மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்