செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா செங்கல்பட்டு அழகேசன் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ். உத்திரகுமார் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்விச்செம்மல் .கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன். அந்தப் பள்ளியில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5000
இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000 என பத்தாயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் பரிசு ரூ. 3000, இரண்டாம் பரிசு ரூ.2000,மூன்றாம் பரிசு ரூ. 1000 என மொத்தம் 16000 ரூபாய் ஆர்.கே ரவி அவர்கள் மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேச்சுப்போட்டி மாரத்தான் போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் நற்சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நல சங்கத்தின் செயலாளர் ஏ.ஜி.டி. துரைராஜ், துணைத் தலைவர்கள் சையது அபுதாகிர், ஜெயசிம்மன், பொருளாளர் ராஜமுகமது நாராயனன்.RK.ரவி.ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை ஆசிரியர் கீதா மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக காமராஜர் அவர்களின் பள்ளி மதிய உணவு திட்டத்தை நினைவு கூறும் வகையில் செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலசங்கத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்