மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் , கல்வி குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது மேயர் இந்திராணி பொன்வசந்த்,தெரிவித்தார். மதுரை மாநகராட்சி கீரைத்துறை பாரதிதாசனார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு “மதிப்பு கல்வி” கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரபஞ்சனா நிறவனத்திற்குமேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் (15.07.2024) அன்று வழங்கப்பட்டது. மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி திறன், மதிப்பீடு, கல்வியில் அதிக கவனம் மற்றும் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக “மதிப்பு கல்வி” குறித்த விழிப்புணர்வு நிகழ்வு பிரபஞ்சா அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில், நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கீரைத்துறை பகுதியில் உள்ள பாரதிதாசனார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கல்வி குறித்த விழிப்புணர்வு மேயர், ஆணையாளர் தலைமையில் நடைபெற்று வரும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரபஞ்சனா நிறுவனத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இன்நிறுவனமானது, பிற மாநகராட்சி பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்நிகழ்வில், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், பிரபஞ்சனா நிறுவனத் தலைவர் கலாவதி ஜெய், மனநல ஆலோசகர் சர்மிளா, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர்சந்திரசேகர், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, தலைமை ஆசிரியர் காசிராஜன், ஆசிரியர்கள் பரமசிவம், சாந்தி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி