மதுரை : மதுரை மாவட்டம், வலையப்பட்டி அருகே உள்ள பாண்டு குடி ஸ்ரீ லட்சுமி நாராயணா சி.பி.எஸ்.இ. பள்ளியில், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், பள்ளியின் இயக்குனர் இலக்கியா தலைமை தாங்கினார். மூத்த தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு பேச்சாளராக நல்லோர் குழுவை சேர்ந்த துரை விஜய பாண்டியன், செல்வி மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்வில், மண், மரம், மழை, மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு நெகிழி பயன்படுத்துவதினால் வரக்கூடிய தீமைகள், நெகிழி ஒழிப்பினால் மண்வளம் எவ்வாறு பாது
காக்கப்படுகிறது. நெகிழியினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள், அதை எவ்வாறு தடுப்பது மற்றும் மழை நீரின் சேமிப்பின் அவசியத்தை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகள் நெகிழி பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளியின் இயக்குனர் இன்டர்நேஷனல் பிளாஸ்டிக் பேக் ப்ரீ டேயை முன்னிட்டு, மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.தலைவர் ரெகுனா பேகம் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி