திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் இன்று நடைபெற்றது இதில்
ஆலாடு கொடூர் நாலூர் சிறுவாக்கம்தே வதானம் காணியம்பாக்கம் அனுப்பம்பட்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள்
கலந்துகொண்டு வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு வழங்கினர்.
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வட்டாட்சியர் மதிவாணன் ஒன்றிய குழு தலைவர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர் அப்போது அவர்களிடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் முன் வரவில்லை எனவும்
உயர் மின் அழுத்த மின்கம்பிகளால் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மின்தடத்தை மின்வாரிய அதிகாரிகள் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தடபெரும்பாக்கம் கிராமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயர் மின் அழுத்த கம்பியை மாற்றி அமைப்பது தொடர்பாகவும் 100 நாள் பணிகளை அனைவருக்கும் முறையாக வழங்கவும் வீட்டுமனை பட்டா கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு