திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கசுவா சேவாலயா ஆதரவற்றோர் பள்ளியில் 36 வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
35 ஆண்டுகளுக்கு முன் ஐந்து மாணவர்களைக் கொண்டு துவங்கிய சேவாலயா நிறுவனம் தற்பொழுது ஆதரவற்ற மாணவர்கள் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் என 2500 மாணவ மாணவியர்கள் இங்கு பயின்று வருகின்றனர். மேலும் இந்த வளாகத்தில் 120க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி சுகாதாரம் கோ சாலை இயற்கை விவசாயம் சமூக நலன் பெண்கள் மேம்பாடு ஆதரவற்ற ஏழை சிறார்களுக்கு ஆதரவு கரம் என பல்வேறு விதங்களில் சமுதாயத்தில் தொண்டு செய்து வரும் இந்நிறுவனத்தின் 36 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு சேவாலயா முரளிதரன் அவரோடு இணைந்து கைகோர்த்து தொண்டு நிறுவனத்தில் சேவை செய்து வரும் ஆசிரியர்கள் ஓட்டுநர்கள் ஆதரவற்றவர்களை பராமரிக்கும் ஊழியர்கள் என ஒவ்வொருவரையும் பாராட்டி கௌரவித்தார்.
சேவாலயாவில் பணியாற்றிடும் ஊழியர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக உணவளிக்கும் பணியை மேற்கொண்டு வரும் அன்னம்மாள் உள்ளிட்ட அனைவர் சார்பிலும் கேக் வெட்டி அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி நிர்வாகம் சார்பில் சிறப்பித்தனர். பாக்கம் கசுவா கிராமத்தில் பெரும் ஐந்து மாணவர்களுடன் துவங்கி சென்னை திருநெல்வேலி தஞ்சாவூர் என 29 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதனை பாராட்டும் விதமாக சேவாலயா நிறுவனர் முரளிதரன் அவர்களுக்கு கிராமத்தினர் சார்பில் அண்ணல் அம்பேத்கர் சுடர் விருதும் திருவுருவட்சிலையும் வழங்கப்பட்டது. 36 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் விதமாக ஆண்டு மலரை வெளியிட்டனர். திருநெல்வேலி தஞ்சாவூர் தர்மபுரி சென்னை காஞ்சிபுரம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சேவாலையா உறுப்பினர்கள் பங்கேற்றி சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு