திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல் சாவடியில் பிரபல தனியார் வாகன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு துப்புரவு, தோட்ட பணி, ஓட்டுநர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இன்று காலை பணிகளை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் பெண் தொழிலாளி ஒருவரை அண்மையில் பணி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் தொழிற்சாலை உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து மேற்கொண்டுள்ள திடீர் போராட்டம் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு