மதுரை: மதுரை மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்
பிற்கான தேர்தல் வெள்ளியன்று நடந்தது. இதில், வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த மேலாண்மை குழுவை புத்துயிர் பெற செய்யும் வகையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதி
நிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர் நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நேற்று (ஆக.2) ம் தேதி நடந்தது. இந்நிலையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான கூட்டம், தேர்தல் மற்றும் உறுப்பினர் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக அரசின் நெறிமுறைகளின் படி மதுரை மாநகராட்சிக்குட்பட்ட தல்லாகுளம் அருகே உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் தேர்தல் நடந்தது.
பள்ளியின் வளர்ச்சி மற்றும் மேலாண்மை குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரின் பொறுப்புகள் குறித்து தலைமை ஆசிரியர் ரூபி பேசினார். பள்ளியின் ஆசிரியை ஆனந்தி வரவேற்புரை வழங்கினார். மாநகராட்சி 31 வது மாமன்ற உறுப்பினர் முருகன் முன்னிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தேர்தலை நடத்தினார். பள்ளியின் உறுப்பினர்கள் தலைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக டாட்டா எல்.ஐ.சி சரவணன், விஷ்ணுபிரியா ஆகியோர் பங்கேற்றனர். முதலில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை உறுப்பினர்களாக தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் விருது தமிழ் ஆசிரியர் கணேஷனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 6 முதல் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடந்தது.
இதில் தேர்வான உறுப்பினர்கள் சேர்ந்து, பள்ளி மேலாண்மை குழு தலைவராக குழந்தையின் தாயார் முனீஸ்வரி தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து துணைத்தலைவர் தேர்தலில் குழந்தையின் தாயார் செல்வி தேர்வு செய்யப்பட்டார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பாக பெண்கள் 85 சதவீதம் தேர்வு செய்யப்பட்டனர். குழு உறுப்பினர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில், அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் குமார் நன்றி கூறினார். இதே போல், பிற உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் தேர்தல் நடந்தது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி