திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை மையமாகக் கொண்டு ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சைன் சமுதாய கல்லூரி இயங்கி வருகிறது 2024 ஆண்டிற்கான மாணவ மாணவியர் விடைபெறும் நாள் விழா (3.8.2024) கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ஏ.ஆரோன் மற்றும் கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.யாபேஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினர். இறுதியில் கல்லூரியின் ஆசிரியர்களுக்கு மாணவ மாணவியர் மிகவும் அன்புடன் பிரியா விடை கொடுத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு