செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்தமறைமலை நகர் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அ.இ.அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு மறைமலை நகராட்சியில் மாடுகள், தெருநாய்கள் பிடிக்காமல் ஆங்காங்கே தெருக்களில் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்துகிறது. . NH-1 பகுதியில் மாடு முட்டி ஒரு முதியவர் இறந்த பிறகும் எந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து. தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட நகராட்சி சமுதாய கூடம் 2 1/2 வருடங்கள் ஆகியும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் இக்கட்டித்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராதாததை கண்டித்தும்.
வல்லாஞ்சேரி மக்கள் பொது பயன்படுத்தும் வழித்தடத்தை ஜோகோ என்ற நிறுவனம், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் முதியவர்கள், மூன்று கிலோ மீட்டர் தூரம் NH-45 ரோட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தினமும் பணிக்கு மற்றும் அலுவலகங்களுக்கு இரவு நேரங்களில் சென்று வருவதால் ஜோகோ நிறுவனம் உயர்மட்ட பாலமும், சுரங்க பாதையையும் உண்டான கட்டுவதற்கு தீர்மானத்தை நிறைவேற்றிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்காத நகராட்சி நிறுவாகத்தைக் கண்டித்து பாவேந்தர் சாலை, திருவள்ளுவர் சாலை, கம்பர் சாலை, அண்ணா சாலை ஆகிய பிரதான சாலைகளில் நடைபாதை ஆக்கிரமித்து கடைகளை கட்டியுள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது. தமிழக அரசின் மின்சாரம், சொத்து வரி, உயர்வைக் கண்டித்தும்.
பொத்தேரி மேற்கு சர்வே எண்: 223 தாங்கல் ஏரி சுற்றியுள்ள ஆகிகிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் இந்நாள் வரை எந்த ஒரு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மேற்கண்ட சீர்கேட்டை கண்டித்து அ.இ.அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்