செங்கல்பட்டு: இந்திய கட்டுமான துறையையும் ,அது சார்ந்து இயங்கக்கூடிய மற்ற துறைகளின் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளாமல் தயார் செய்யப்பட்ட 2024 நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் வாசித்த ஒன்றிய நிதி அமைச்சரின் கவனத்தையும், கட்டுமான துறையின் மீது கவனம் செலுத்த தவறிய ஒன்றிய அரசின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது பல்வேறு தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்றது. கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில இணைச் செயலாளர். சிங்கை. கோ. கணேஷ். அவர்களின் தலைமையில், அமைப்பின் மாநில இணைச் செயலாளர் பானு கோபன் அவர்களின் முன்னிலையில், கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் ஆற்றல்மிகு தலைவர் பொதுச் செயலாளர் யுவராஜ் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட பொறுப்பாளர்கள் சிதம்பரேஷ் முனீர் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அமைப்பினுடைய மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் , உறுப்பினர்கள் தோழமை அமைப்புகளுடைய மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்