விருதுநகர்: காரியாபட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முஷ்டக் குறிச்சியில் நடைபெற்றது . அரசு துறைகளின் சேவைகள் விரைவாக மக்களுக்கு கிடைக்க வழி வகை செய்யும் நோக்கத்தோடு. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம். காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்த . முஷ்டக் குறிச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். தாசில்தார் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். – துணை தாசில்தார் சிவனாண்டி வரவேற்றார். பொது மக்களிடமிருந்து 502 மனுக்கள் பெறுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கை குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு தீர்வு காணப் பட்டது . நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் புவனேஸ்வரி, . மாதவி , ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மருதுபாண்டியன், சூரியன், தண்டாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி