செங்கல்பட்டு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழ்நாட்டு மாணவர்கள் வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை (09.08.2024)அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து ATM Cum Debit Card மற்றும் தமிழ்பெருமிதம். உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகங்கள் அடங்கிய Welcome Kit-களை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நகரமன்றத் தலைவர்கள் ஜெ.சண்முகம், எம்.கே.டி.கார்த்திக்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் இளங்கோவன். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார். இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ப.கி.கிள்ளிவளவன், ஆப்பூர் சந்தானம், பேராசிரியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் உள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்