கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம், முட்டியம் கிராமத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் கிளை துவக்க விழா, மாவட்ட தலைவர், அம்பேத் விஜி, மாவட்ட துணைத்தலைவர் ஆகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் டாக்டர் இ. மெய்யழகன் கலந்துகொண்டு மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். இந்தியாவில் பார்பனியர்களால் தாழ்த்தப் பட்டவர்களாக்கபட்ட சமுகத்தினரை தற்போது தன்னை உயர் ஜாதியினர் என்றும் அடையாள படுத்திக் கொண்டு , தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலில் உள்ளே விடாமல் தடுப்பது போன்ற ஜாதி பிரிவினைகளை தூண்டும், தீய சக்திகள் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . என வலியுறுத்தினார். மாநில துணைத்தலைவர், வழக்கறிஞர் எம். நாகராஜன், மாநில செயற்குழு தலைவர், பொத்தேரி எஸ். நித்யா , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர். மீஞ்சூர் ஒன்றிய மன்ற தலைவர் தன்ராஜ், பொ. மெய்யூர் மன்ற செயலாளர் செல்வம், முட்டியம் கிளை மன்ற கௌரவ தலைவர் கொளஞ்சி மன்ற தலைவர். ஆறுமுகம் செயலாளர். பாலகுமார்மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு