மதுரை: தீபாவளி பண்டிகைக்கு சேர்த்து வைத்த பணத்தை வயநாடு மக்களுக்கு வழங்கிய (8). வயது சிறுமிக்கு சுதந்திர தினத்தன்று ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மதுரை திருநகரை சேர்ந்த முத்துப்பாண்டி கார்த்திகா தம்பதியினரின் (8). வயது மகள் ஸ்ரீஜோதிகா கடந்த ஐந்தாம் தேதி அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரின் நேரில் சந்தித்து தீபாவளி பண்டிகைக்காக , தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிர் இழந்தவர்கள் மேலும்,இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிக்கர நீட்ட வேண்டும் என்று கூறி ,தனது உண்டியல் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அன்றைய தினமே சிறுமியை சால்வை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகஸ்ட் 15ஆம் தேதி காவலர் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், சிறுமி ஜோதிகாசியை அழைத்து, மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது பெரும்வரவேற்பு பெற்றுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி