திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் மீஞ்சூர் அடுத்த பசுவன்பாளையம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆடித்திருவிழா கடந்த வெள்ளியன்று காப்பு கட்டலுடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இதனை தொடர்ந்து இன்று காலை மலரலங்காரத்தில் ஜொலித்த அம்மனுக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், கும்பம் போட்டும் வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு